[X] Close

காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் வருகை

CM-Palanisamy--OPS-arrives-Kaveri-Hospital

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதனிடையே பல முறை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் தொண்டர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் நேற்று லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இருப்பினும் இன்று காலை முதல் இருந்து காவேரி மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் சென்றுள்ளார். இதுமட்டுமில்லாமல் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனை சென்றுள்ளனர். முன்னதாக சேலத்தில் இன்று பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்றிரவு முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்பியிருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close