[X] Close

நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்

Police-advice-to-dmk-cadres

சென்னை காவேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என திமுக தொண்டர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதனிடையே பல முறை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் தொண்டர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் நேற்று லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இருப்பினும் இன்று காலை முதல் இருந்து காவேரி மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என திமுக தொண்டர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் போலீசார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close