Published : 29,Jul 2018 03:02 PM
கொட்டும் மழையிலும் குவிந்த திமுக தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே கருணாநிதி நலம் பெற வேண்டி முழக்கமிட்டனர். ஏராளமான பெண்களும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனை அருகே குவிந்துள்ளனர்.
கொட்டும் மழையிலும் திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி உடல்நலம் தொடர்பாக காவேரி மருத்துவமனை சார்பில் சற்று நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், பொன்முடி, வாகை சந்திரசேகர், உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். அதேபோல், உதயநிதி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட உறவினர்கள் பலரும் மருத்துவமனையில் வருகை தந்தனர்.