வைரலாகும் தோனியின் புதிய 'ஹேர் ஸ்டைல்' !

வைரலாகும் தோனியின் புதிய 'ஹேர் ஸ்டைல்' !
வைரலாகும் தோனியின் புதிய 'ஹேர் ஸ்டைல்' !

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர். 2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வந்தது, கேப்டனானது, பல கோப்பைகளை வென்றது என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இப்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடினார். இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால், ஒரு நாள் தொடர் முடிந்தவுடன் நாடு திரும்பினார்.

இப்போது தோனி தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நண்பர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் நண்பர்களோடு அவ்வப்போது கால்பந்துப் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தோனி தன்னுடைய புதிய சிகை அலங்காரத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தோனி தன்னுடைய வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கும் புகழ்ப்பெற்றவர்தான். தோனி அணிக்கு வந்த புதிதில் நீண்ட தலைமுடி வைத்திருந்தார். அவரின் இந்த நீண்ட தலைமுடி பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் வரை கவர்ந்தது. அப்போது அவர் தோனியிடம் "உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் அழகாக இருக்கிறது, இதனை மாற்றிவிடாதீர்கள்" என்று கூறினார்.

பின்பு, ஒட்ட வெட்டப்பட்ட முடியுடன் தோனி இருந்தார். இப்போது அண்மையில் வெள்ளைதாடியுடன் முடியுடன் "சால்ட் அண்டு பெப்பர்" லுக்கில் தோனி காட்சியளித்தார். இப்போது மீண்டும் ஒரு புதிய ஹேர் ஸ்டைலுக்கு தயாராகி விட்டார். இந்த ஹேர் ஸ்டைலை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தோனிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதனை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்போது தோனி வி ஷேப் ஹார் ஸ்டைலுடன் காணப்படுகிறார். இப்போது தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com