[X] Close

டிடிவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : சிசிடிவி காட்சி வெளியீடு 

Petrol-Bomb-thrown-in-TTV-Dhinakaran-Home---CCTV-Footage-Release

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், ஆர்.கே நகர் எம்எல்ஏவும் ஆன டிடிவி தினகரன் வீடு அடையாறில் உள்ளது. இந்த வீட்டில் இன்று பகல் 12.30 மணியளவில் காரில் வந்த சிலர் பெட்ரோல் குண்டு வீச முயன்றனர். ஆனால் குண்டு காரிலேயே வெடித்தது. இதில் கார் டிரைவர் பாண்டிதுரை, புகைப்படக்காரர் டார்வின் மற்றும் ஆட்டோ டிரைவர் ஒருவர் என மொத்தம் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 


Advertisement

இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் பகுதி நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த புல்லட் பரிமளம் என்பவர் கடந்த சில தினங்ளுக்கு முன்பு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை புல்லட் பரிமளம் தனது ஆதரவாளர் ஒருவருடன் டிடிவி தினகரன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் காரில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச முற்பட்ட போது பெட்ரோல் குண்டுகள் திடீரென வெடித்ததில் கார் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. இதில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களான கார் ஓட்டுநர் பாண்டிதுரை, புகைப்பட கலைஞர் டார்வின் ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம் என்பவரும் காயம் அடைந்துள்ளார். காயம் அடைந்த மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement

இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு காவல் துணை ஆணையர் சஷாங்க் சாய் பெட்ரோல் குண்டு வெடித்த காரை ஆய்வு செய்தார். அப்போது விபத்தில் ஏற்பட்ட கார் காஞ்சிபுரத்தை சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து தற்போது அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேலும் காயம் அடைந்த நிலையில் புல்லட் பரிமளம் தலைமறைவாகியுள்ளார்.பரிமளத்தின் கார் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close