[X] Close

டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : 3 பேர் காயம்

Petrol-Bomb-thrown-in-TTV-Dhinakaran-Home---3-Persons-Injury

டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றதில் மூன்று பேர் காயமடைந்தனர்.


Advertisement

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், ஆர்.கே நகர் எம்எல்ஏவும் ஆன டிடிவி தினகரன் வீடு அடையாறில் உள்ளது. இந்த வீட்டில் இன்று பகல் 12.30 மணியளவில் காரில் வந்த சிலர் பெட்ரோல் குண்டு வீச முயன்றனர். ஆனால் குண்டு காரிலேயே வெடித்தது.


Advertisement

இதில் கார் டிரைவர் பாண்டிதுரை, புகைப்படக்காரர் டார்வின் மற்றும் ஆட்டோ டிரைவர் ஒருவர் என மொத்தம் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கார் காஞ்சிபுரத்தை சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. புல்லட் பரிமளம் அமமுக கட்சியிலிருந்து  தினகரனால் அண்மையில் நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close