இந்தியா டெஸ்ட் அணியில் பத்து வருடத்துக்குப் பின் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக சாஹா விலகியதால் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். அவர் காயம் இன்னும் குணமாகாததால் இப்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்துள்ளார்.
ராகுல் டிராவிட் தலைமையில் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கும் இடம் பெற்றிருந்தார். 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் அவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.இந்நிலையில் இந்திய அணி, இங்கிலாந்தில் இப்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் பற்றி தினேஷ் கார்த்திக் கூறும்போது, ’10 வருட இடைவெளிக்குப் பின் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் கொஞ்சம் பதட்டமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக விளை யாடுவது சவாலானது. 2007-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். அந்தப் போட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு அதிகமாக மனதில் இல்லை. ஆனால், இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே உரசலும் வாக்குவாதங்களும் ஏற்பட்டது.
டிரன்ட்பிரிட்ஜில் நடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானை அவுட் ஆக்க வேண்டும் என்பதற்காக, பிட்சில் ஜெல்லி மிட்டாய்களை இங்கிலாந்து வீரர்கள் போட்டு கடுப்பேற்றினர். இதனால், ஜாகீர்கான் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர்களுக்குப் பதிலடி கொடுத்த ஜாகீர்கான், 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். நாட்டிங்காமில் தோல்வியடைய இருந்த போட்டி யில் டிரா செய்தோம். ஓவலில் நடந்த போட்டியில் கும்ப்ளே சதம் அடித்தார். அந்தப் போட்டியை டிரா செய்தோம். அந்த நினைவுகளோடு இங்கிலாந்து தொடரை எதிர்பார்த்துள்ளேன். கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரின் தலைமையில் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறோம்’ என்றார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!