கர்நாடக கோட்டையில் திப்பு கால 1000 போர் ராக்கெட்டுகள் கண்டெடுப்பு

கர்நாடக கோட்டையில் திப்பு கால 1000 போர் ராக்கெட்டுகள் கண்டெடுப்பு
கர்நாடக கோட்டையில் திப்பு கால 1000 போர் ராக்கெட்டுகள் கண்டெடுப்பு

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய வீரர். இவரது காலத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் குண்டுகள் இப்போதுகண்டெடுக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம் சிவகோக்கா மாவட்டத்தில் திப்புகால பிடநூறு கோட்டை உள்ளது. இந்தக் கோட்டைக்கு அருகில் நாகரா என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் ஆழப்படுத்தி விரிவாக்கம் பணிகள் நடைபெற்றன. அப்போது துண்டிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்திற்கும் மேலாக போர் ராக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் போர் ராக்கெட்டுகள் அனைத்து 18ம் நூற்றாண்டில் திப்பு காலத்தில் போரில் பயன்படுத்தப்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தொல்லியல்துறை உதவி இயக்குநர் ஷேஜாஸ்வரா நாயகா கூறுகையில், “தண்ணீரில்லாமல் காய்ந்து கிடந்த கிணறை தோண்டும் பணியின் போது, சக்திவாய்ந்த ராக்கெட்டுகள் மற்றும் குண்டுகள் குவியலாக இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் பொட்டாஷியம் நைட்ரேட், கர்கோல், மெக்னீசியம் தூள் போன்றவற்றால் ஆனவை. போரின் போது எதிரி நாட்டை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டவை.

15 பேர் கொண்ட தொல்லியல் துறையினர், கிணறு தோண்டுபவர்கள் கடந்த மூன்று நாட்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். கண்டெடுக்கப்பட்ட போர் ராக்கெட்டுகள் 23-26, 12-14 இன்ச் ஆகிய அளவுகளில் இருந்தன. அவை எரிந்த நிலையில் கிணறு வடிவிலான அந்த இடத்தில் பாதுகாப்பாக இருந்துள்ளன” என்றார். 

1799ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடைபெற்ற 4வது ஆங்கிலோ-மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். திப்பு தனது போரின் போது ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தினார். பிரெஞ்சு படைகளின் உதவியுடன் திப்பு இதனை கற்றுக் கொண்டு தனது படையை வலிமையாக்கினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com