[X] Close

நீதிமன்றத்தில் கல்விக் கடனுக்கான விதிகளை விளக்கிய எஸ்பிஐ: மாணவி மனு தள்ளுபடி

SBI-Clarifies-Education-Loan-Rules-in-MHC--Student-Petition-dismissed

கல்விக் கடனுக்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத மாணவிக்கு கடன் மறுத்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Advertisement

வாங்கிய கடனை தந்தை திருப்பி செலுத்தாததால், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகாவுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வைத்தியநாதன், வங்கி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தீபிகா மேல் முறையீடு செய்தார். அதில், தன் தந்தைக்கு கடன் ஏதும் நிலுவையில் இல்லை எனவும், தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, பாரத ஸ்டேட் வங்கி, 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவும் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்பிஐ சார்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதாவது:-


Advertisement

*கல்விக்கடனுக்கு 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க  வேண்டும்.

*நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை பெற்றிருந்தால் கல்வி கடன் வழங்கப்படாது.


Advertisement

*விண்ணப்பதாரரின் தந்தைக்கு எந்தக் கடனும் இருக்க கூடாது என விதிமுறைகள் இருப்பதாக வங்கி நிர்வாகம் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறபித்த உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement
[X] Close