[X] Close

நண்பர்களுடன் தோனியின் 'பாத்ரூம்' அரட்டை !

MS-Dhoni-Chats-With-Singer-Rahul-Vaidya-In-Bathroom

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அண்மையில் தன் மனைவி மற்றும் மகளுடன் திருமணத்துக்கு சென்று இருந்தார். அந்தத் திருமணம் முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல் மகள் பூர்ணா பட்டேலின் திருமணமாகும்.


Advertisement

தோனியின் செல்ல மகள் ஜிவா மற்றும் மனைவி சாக்சி அணிந்திருந்த ஆடை பெரிதும் பேசப்பட்டது. அதேபோல தல தோனி பைஜாமா குர்தா போன்ற ஆடையை அணிந்திருந்தார்.


Advertisement

திருமண நிகழ்ச்சியில் தோனியின் நண்பரான பாலிவுட் பாடகர் ராகுல் வைத்யாவும் வந்திருந்தார். அப்போது தோனியும் ராகுல் வைத்யாவும் பாத்ரூமில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ராகுல் வைத்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.


Advertisement

அதில் பாத்ரூமில் சாவகாசமாக உட்கார்ந்திருக்கிறார் தோனி அப்போது ராகுல் “இவ்வளவு கூலாக இருப்பது யாரால் முடியும்? அது உங்களால்தான் முடியும்” என்று சொல்கிறார் ராகுல். அதற்கு தோனி, “ஆனால், பாத்ரூமில்தான் அப்படி கூலாக இருக்க முடியும்” என்கிறார். பிறகு, “நாங்கள் பாத்ரூம் பிரேக்கில் இருக்கிறோம்.

ஆனால் தோனியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது” என்று கூறி அனைவரும் சிரித்தபடியே முடிகிறது வீடியோ. தோனிக்கு இத்துடன் ஒரு மாதத்க்கும் மேலாக ஓய்வு இருக்கிறது. இந்திய அணி டெஸ்ட் போட்டிகளை முடித்த பின்பு, செப்டம்பரில் ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கிறது. இத்தோடு ரசிகர்கள் தோனியை ஆசியக் கோப்பை போட்டியில்தான் பார்க்க முடியும்.


 


Advertisement

Advertisement
[X] Close