[X] Close

ரயிலில் சிக்கிய பெண்ணை போராடிக் காப்பாற்றிய காவலர்

A-Woman-slipped-in-Train---a-police-recover-her-suddenly

மும்பையில் ரயிலிலிருந்து தவறிவிழுந்த பெண்ணை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

மும்பையின் கன்ஜூமார்க் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு புறப்பட்ட புறநகர் ரயிலில் கடைசி நேரத்தில் ஏற பெண் ஒருவர் முயற்சித்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த பெண்ணால் உள்ளே செல்ல முடியவில்லை. ரயிலின் உள்ளே செல்ல முடியாமல் திரும்பியபோது, அந்தப் பெண்ணின் ஆடை ரயிலில் சிக்கியது. புறப்பட்ட ரயிலின் வேகத்தால் உடனே அவர் ரயிலுக்கு அடியில் சிக்கினார். அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இதைக் கண்டவுடன், சட்டென விரைந்து அந்தப் பெண்ணை இழுத்து காப்பாற்றினார். இதனால் அந்த பெண் உயிர்பிழைத்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது அந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 


Advertisement

Advertisement
[X] Close