[X] Close

மலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ! ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Chennai-High-Court-dismissal-Rajinikanth-against-case

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Advertisement

சினிமா பைனான்சியர் போத்ராவிடம், படத்தயாரிப்பு செலவுகளுக்காக இயக்குனர் கஸ்தூரிராஜா ரூ.65 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். தான் கொடுக்காவிட்டால் தனது சம்பந்தியான ரஜினிகாந்த் கொடுப்பார் என்ற உத்தரவாதத்துடன் கஸ்தூரிராஜா கொடுத்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பி வந்ததாக, போத்ரா வழக்கு தொடர்ந்தார். இதற்கு ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், தவறான எண்ணத்துடனும், தன்னிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், சினிமா பைனான்சியர் போத்ராவின் வழக்கை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தார். மலிவான விளம்பரத்துக்காக ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இதுபோன்ற வழக்குகளை ஆரம்பகட்டத்திலேயே தூக்கியெறியாவிட்டால், மலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடும் மனுதாரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close