சர்ச்சையில் சிக்கிய காவல் ஆய்வாளர்..?

சர்ச்சையில் சிக்கிய காவல் ஆய்வாளர்..?
சர்ச்சையில் சிக்கிய காவல் ஆய்வாளர்..?

காவல்துறை சீருடையில் இருக்கும் போது பெண் சாமியாருடன் இருந்த புகைப்படம் வைரலானதால் காவல் ஆய்வாளர் சஞ்சய் ஷர்மா இடமாற்றம். 

டெல்லி அருகே உத்தம் நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷர்மா என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களாக வேலை நிமித்தத்தால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் சஞ்சய் ஷர்மா அடிக்கடி தனது சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் நமிதா ஆசாரி என்ற பெண் சாமியாரிடம் மனநிம்மதிக்காக தியான பயிற்சிகளை பெற்றுவந்தார். 

இந்நிலையில் பெண் சாமியார் நமிதா ஆசாரி இந்தர்பாலை அவரது அலுவலகத்தில் காணவந்துள்ளார். அப்போது அவருக்கு நமிதா ஆசாரி தியான பயிற்சியை வழங்கியுள்ளார். சீருடையில் இருக்கும் போது பெண் சாமியாருடன் இருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் சஞ்சய் ஷர்மா ஜெனக்புரி காவல்நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com