Published : 23,Jul 2018 01:59 AM

ஆளுநரை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

MK-Stalin-to-Meet-Governor-today

தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து மனு அளிக்கவுள்ளார்.

கடந்த சில நாட்களாக சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதில் 180 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல்வேறு வருமான வரி சோதனைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் ஸ்டாலின் முறையிட உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக இன்று காலை 11 மணிக்கு ஸ்டாலினுக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.