காவல்துறை உதவி ஆணையராக பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டவர் ஐஜி பொன் மாணிக்கவேல். சிலை கடத்தல் வழக்கு மட்டும் அல்லாது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் புகழ்பெற்றவர். இந்நிலையில் பிரபுதேவா காவல்துறை உதவி ஆணையராக நடிக்கும் ஒரு படத்துக்கு ‘பொன் மாணிக்கவேல்’என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ‘பாகுபலி’யில் காளகேய ராஜாவாக நடித்த பிரபாகரும் நடிக்கிறார். படத்தை ஏ.சி.முகில் இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “என் சொந்த ஊரான சேலத்தில் பொன் மாணிக்கவேல் சில காலம் பணியாற்றினார். அவரின் நடவடிக்கையில் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட கதைதான் இது. அதனாலேயே தலைப்பும் இவ்வாறு உள்ளது” என தெரிவித்தார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!