Published : 19,Jul 2018 01:04 PM
ஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'தடக்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
மராட்டிய மொழியில் வெளிவந்து பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற சாய்ராட் படத்தின் ரீமேக் ‘தடக்’. ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டர் நாயகனாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாயகியாகவும் நடித்துள்ளனர். ‘தடக்’ படத்தின் டிரெய்லர், டைட்டில் டிராக் ஆகியவை யு டியூபில் அதிக அளவிலான பார்வையாளர்களை பெற்றது. இத்திரைப்படம் ஹிந்தி திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.