[X] Close

மோடி பங்கேற்ற கூட்டத்தில் சரிந்த பந்தல் : 20 பேர் படுகாயம்

Tent-collapses-during-PM-Modi-s-Midnapore-rally--20-injured

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். 


Advertisement

மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக தற்காலிக பந்தல் சரிந்து விழுந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி, தனது பாதுகாவலர்களை அழைத்து காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


Advertisement

பின்னர் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, காயமடைந்த ஒருவர் கேட்டுக்கொண்டதால் அவருக்கு பிரதமர் ஆட்டோகிராப் வழங்கினார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு சுயமாக இயங்குவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.


Advertisement

Advertisement
[X] Close