ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் எனும் கொண்டாட்டம் ஒரு வழியாக முடிவடைந்தது. இந்த உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கைபற்றியது. ஜூன் 14 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பையில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் விரைவில் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் இந்தாண்டு உலகக் கோப்பை போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு கொடுக்கப்படும் மிகவும் உயரிய விருதான் "கோல்டன் பால்" விருது யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.
ஆனால் இந்தாண்டுக்கான "கோல்டன் பால்" விருதை வென்றார் குரோஷியாவின் லூகா மோட்ரிச். குரோஷியாவின் வெற்றிக்கு ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக பங்காற்றிய அவர், மிகவும் திறமையான வீரராக பிஃபா தொழில்நுட்ப குழுவினரால் அறியப்பட்டுள்ளார். உலகக் கோப்பைப் போட்டிகளில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுவது "கோல்டன் பால்" விருது. இது உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விருதாகும்.
இவ்விருதினை பிஃபா அமைப்பின் தொழிநுட்ப குழுவினரால் வீரர்களின் திறன், திறமை, கோல் அடிக்கும் லாவகம் பின்பு சர்வதேச ஊடகங்களின் வாக்குகளின் அடிப்படையில் வீரர் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தொடரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பந்துகளும் வழங்கப்படுகிறது.
முதலாவது உலகக் கோப்பை போட்டியில் முதல் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட போதும், விருதுகள் வழங்கப்படவில்லை. பின்பு, இந்த விருது 1982 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது வரை நடைமுறையில் உள்ளது. பிரேசிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இவ்விருது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
இப்போது கோல்டன் பாலை லூகா மோட்ரிச் கைபற்றியுள்ளார். ஆனால், இந்த விருது பெல்ஜியத்தின் ஈடன் ஹஸார்டுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வெள்ளிப் பந்து விருதும், பிரான்ஸ் அணியின் ஆண்டோன் கிரீஸ்மேனுக்கு வெண்கல பந்து விருதும் வழங்கப்பட்டது. கோல்டன் பால் விருதை வென்றதன் மூலம் கால்பந்தாட்ட உலகில் மெஸ்ஸி, ரொனால்டோ வரிசையில் லூகா ஒரு புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix