[X] Close

குளத்தில் தவறி விழுந்து தத்தளித்த குட்டி யானை - வைரல் வீடியோ

an-elephant-calf-rescued-by-forest-officials-in-west-bengal

மேற்கு வங்காள மாநிலத்தில் குளம் ஒன்றில் விழுந்த குட்டி யானை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. 

மேற்கு வங்காள மாநிலம் அலிபுரதுவர் பகுதியில் வனப்பகுதி ஒன்றில் இரவு நேரத்தில் உலவிக்கொண்டிருந்த குட்டி யானை குளம் இருப்பது தெரியாமல் அதற்குள் தவறி விழுந்துவிட்டது. அதன் பிளிறல் சத்தம் கேட்ட கிராமத்தினர் ஏராளமானோர் குளத்தை சுற்றி குவிந்துவிட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள், உடனே வனத்துறைக்கு தகவல் அளித்தனர்

தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வருவதற்காக தும்பிக்கையை உயர்த்திய படி அந்த யானை தண்ணீருக்குள் அங்கும் இங்கும் ஓடியது. இந்நிலையில்  மீட்புக்குழுவினர் உதவியுடன் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜேசிபி இயந்திரம் ஒன்றை வரவழைத்து யானையை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close