“திரையுலகினர் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” -டி.ராஜேந்தர்

“திரையுலகினர் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” -டி.ராஜேந்தர்
“திரையுலகினர் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” -டி.ராஜேந்தர்

திரையுலகில் பிரபலங்கள் மீது கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு, சம்பந்தப்பட்டவர்களே அதற்குரிய விளக்கமளித்தால் பிரச்னைகள் தீரும் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை சென்னை வடபழனியில் உள்ள தனியார் ‌நட்சத்திர விடுதியில் சந்தித்ததாக தெரிவித்திருந்தார். இதேபோல அவர் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் குறித்தும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை விமான நிலையத்தில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த நடிகர் டி.ராஜேந்தர் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறினார். திரையுலகினர் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தெலுங்குத் திரையுலகில் புயலைக் கிளப்பிய ஸ்ரீ ரெட்டி விவகாரம் தற்போது, தமிழ் சினிமாவிலும் விஸ்வரூபமெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com