[X] Close

மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

Medical-College-student-suicide

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Advertisement

சென்னை கே.எம்.சி மருத்துவ கல்லூரியில் 3 ஆம் அண்டு படித்து வரும் திருமால் என்ற மாணவன் நேற்று மதியம் 2 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர். 12 ஆம் வகுப்பில் 1135 மதிப்பெண் பெற்றதால் மெரிட் மூலம் கே.எம்.சி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்திருக்கிறார். அவரது அம்மாவும், அப்பாவும் திருமாலின் சிறிய வயதிலேயே பிரிந்து வாழ்ந்து வந்தால் அவர் தனிமையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் இருக்க பிடிக்கமால் நெற்குன்றத்தில் தனியாக வீடு எடுத்து திருமாலும், அவரின் அம்மாவும் தங்கியுள்ளனர்.


Advertisement

4 நாட்களுக்கு முன்னால் அவரது சொந்த ஊருக்கு அம்மா சென்றதால் தனிமையில் இந்த திருமால் நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் இருந்த அவரை சக மாணவர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளனர். இரவு முழுவதும் அவருடன் தங்கி இருந்து காலையில் தான் அவர்கள் கல்லூரிக்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் சென்றவுடன் மதியம் 2 மணிக்கு அவர் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் அம்மாவுக்கு போன் செய்ய வேண்டும் என்று மொபைல் போன் வாங்கி சென்று இருக்கிறார். அவர் 1 மணி நேரமகியும் வராததால் வீட்டு உரிமையாளர் சென்று பார்த்த போது தூக்கிபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அதன் பிறகு உரிமையாளர் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து இருக்கிறார். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.


 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close