[X] Close

கோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு: பயிற்சியாளர் ஆறுமுகம் கைது

Trainer-Arumugam-arrested-for-kovai-Student--death

கோவையில் கல்லூரி மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும்  என்று நேற்று கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல், மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் கீழே நின்றனர்.  அப்போது கீழே நோக்கி விழுந்த மாணவி சன்ஷேடில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் கல்லூரி மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி லோகேஸ்வரியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close