[X] Close

அதிகமாக வரி கட்டும் ஹீரோ யார்?

Which-hero-pays-more-tax

அதிகமாக வருமான வரி கட்டும் நடிகர்களில் அக்‌ஷயகுமாரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருக்கிறார் இந்தி நடிகர் சல்மான் கான்.


Advertisement

இந்தியாவில் அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இந்தி நடிகர்கள் முன்னணியில் உள்ளனர். சல்மான் கான், ஷாரூக்கான், அக்‌ஷயகுமார் உள்ளிட்ட சில இந்தி நடிகர்கள், தங்கள் வருமான வரியை முன்கூட்டியே செலுத்தி வருகின்றனர். அதன்படி இந்தி நடிகர் சல்மான்கான் வருமான வரியாக ரூ. 44.5 கோடி இந்தாண்டு செலுத்தி இருக்கிறார். கடந்த முறை இவர், ரூ. 32.2 கோடி வரியாக செலுத்தி இருந்தார்.

அக்‌ஷய்குமார் ரூ.29 கோடி, ஹிருத்திக் ரோஷன் ரூ.25.5 கோடி, கபில் சர்மா ரூ.23 கோடி செலுத்தியிருக்கிறார்கள். நடிகை அலியா பட் முன் கூட்டியே வரி செலுத்தும் பட்டியலில் இந்த வருடம்தான் இணைந்திருக்கிறார். அவர், செலுத்தியது ரூ.4.33 கோடி. இப்போது ஹாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிற தீபிகா படுகோன், ரூ.10 கோடி வரி செலுத்தி இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close