Published : 23,Mar 2017 04:39 AM

ஆர்.கே.நகர் தேர்தல்: ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு?

Rajinikanth-supports-no-one-in-Coming-election

ஆ.கே.நகர் இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் இசை அமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை சமீபத்தில் சந்தித்தார். அது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘பாஜக வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டதும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரிடம் சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அதன்படி அவரைச் சந்தித்தேன். எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார்’ என்றார்.

அப்போது, பாஜகவில் ரஜினிகாந்த் சேர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுவது பற்றிய கேள்விக்கு, ‘நீங்கள் பார்ப்பது டிரைலர்தான். மெயின் பிக்சர் தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்’ என்று கூறியிருந்தார் கங்கை அமரன்.

இதனால் அவர் பாஜகவில் சேர வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் அதை மறுத்துள்ளார். ‘வரும் தேர்தல்களில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை’ என்று ட்விட்டரில் அவர் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்