‘96’ படத்தின் டீசர் நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய்சேதுபதி, த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘96’. இதில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். இதனை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்கி வருகிறார். இவர் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் டீசரை தற்போது விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டீசரில், விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் மழைச்சாரல் நனைந்தபடி உலா வருகிறார்கள். விஜய்சேதுபதி புகைப்படக்கலைஞராக சுற்றித் திரியும் காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளன. மேலும் கோவிந்த் மேனன் இசைக் கோர்வை இதமான மனநிலையை எழுப்பும் படி உள்ளது. இருளும் ஒளியுமாக கலந்து வெளிப்பட்டுள்ள சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு சிறப்பாக பதிவாகியுள்ளது. படத்தினை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?