கூகுள் நிறுவனம் iOS மென்பொருள் ஜி போர்ட்-இல் (G-Board) மோர்ஸ் கோடை அறிமுகப்படுத்துகிறது.
மோர்ஸ் கோட் 2 (Morse Code) என்றால் குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தகவலைப் பரிமாறிக்கொள்ளும் எழுத்துருக் குறியீட்டின் வகையாகும்.
இந்த டெக்னாலஜியை அஜீத் நடித்த விவேகம் படத்தில் இயக்குநர் சிவா பயன்படுத்தியிருந்தார். பெரும்பாலும் ராணுவம் போன்ற துறைகளில் தகவல்களை ரகசியமாக பரிமாறிக்கொள்ள மோர்ஸ் கோட் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.
முதலில் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தின் ஜி போர்ட்-க்கு மோர்ஸ் கோடை வடிவமைத்த கூகுள் நிறுவனம் இப்போது iOS மென்பொருளில் அறிமுகப்படுத்துகிறது.
மோர்ஸ் கோட் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் கீபோர்ட் முழுவதும் டாட் மற்றும் டாஷ் ஐகான் தோன்றும். அதில் ஒவ்வொரு ஐகானை தொடும் பொழுதும் அதற்குறிய எழுத்து ஸ்கிரீனின் மேல் தோன்றும், இந்த மோர்ஸ் கோடை கற்றுக் கொள்வதற்காக கூகுள் நிறுவனம் பிரத்யேகமாக ‘மோர்ஸ் டைப்பிங்’ என்ற பயிற்சி விளையாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவர் மோர்ஸ் கோட் டைப்பிங் பற்றி ஒரு மணி நேரத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
மோர்ஸ் கோட் டெக்னாலஜி உருவாக்கத்தின் போது கூகுள் நிறுவனத்துடன் பணியாற்றிய டெவலப்பர் கூறும்பேது “இப்போது பெரும்பாலான தொழில்நுட்பங்கள் பெருவாரியான மக்களுக்காகவே உருவாக்கப்படுவதால் குறைபாடுடன் உள்ள நபர்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகிறார்கள். ஆகையால் இந்த மோர்ஸ் கோட் போன்ற டெக்னாலஜிகள் முக்கியம்” என தெரிவித்தார்.
Loading More post
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
செய்ததோ உதவி.. விழுந்ததோ தர்மஅடி! பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞரின் பரிதாப நிலை!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி