மிஷ்கின் இயக்கிய ’பிசாசு’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர், தற்போது மலையாளத்தில் நடித்துவருகிறார். இப்போது, குஞ்சு முகமது இயக்கத்தில் ’விஸ்வாஸபூர்வம் மன்சூர்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பில் மேக்கப் மேனுக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னை சமூக வலைத்தளங்களில் பரபரப்பு பஞ்சாயத்தாகி இருக்கிறது.
இதுபற்றி பிரயாகா கூறும்போது, ‘ஞாயிற்றுக்கிழமை தலசேரியில ஷூட்டிங். வழக்கமா என் மேக்கப்பை நானே பாத்துக்கிறேன். அன்னைக்கு கிளைமாக்ஸ் ஷூட் பண்ணணும். காலைல மேக்கப் போட்டுட்டு போயிட்டேன். டைரக்டர் டல் மேக்கப் வேணும்னு கேட்டார். அதனால கம்பெனி மேக்கப் மேன் ரஹீம்கிட்ட, டல் மேக்கப் போட சொன்னேன். உடனே, ’நடிகைகள் எல்லாருமே இப்படித்தான் இருக்கீங்க. மேக்கப் போடறதுக்கு எங்களை விட மாட்டேங்கறீங்க’ன்னு சொன்னார். நான் பேசாம இருந்தேன். பிறகு ஷாட் முடிஞ்சு வந்ததும் எங்கம்மாகிட்ட அவர் ஏதோ வாக்குவாதம் செஞ்சார். எனக்கும் கோபம் வந்தது. கைய நீட்டிப் பேசினேன். ‘நீ சாதாரணப் பொண்ணு. எப்படி என்னைப் பார்த்து கைய நீட்டிப் பேசலாம்னு கேட்டார். பிறகு திடீர்னு என் கையை திருக வந்தார். டைரக்டர், கேமராமேன் முன்னாலயே இது நடந்தது. இதை பெரிய பிரச்னையாக்க வேண்டாம்னு டைரக்டர் சொன்னாதால அமைதியா இருந்தேன். பிறகு படக்குழு முன்னால நடந்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் ரஹீம். இதுதான் நடந்தது. இப்ப என்னடான்னா, நான் ஏதோ அவரை அடிக்கப் பாய்ந்த மாதிரியும் ரொம்ப திமிரா நடந்துக்கிட்டதாகவும் சொல்றாங்க’ என்றார் பிரயாகா. இப்போது மலையாள நடிகர் சங்கத்திலும் கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பிலும் புகார் செய்திருக்கிறார்.
மேக்கப்மேன் ரஹீம் கூறும்போது, ’படம் ஆரம்பிச்சதுல இருந்தே அவங்களே மேக்கப் போட்டுட்டு இருந்தாங்க. இப்ப, எங்கிட்ட டச்சப் பண்ண சொன்னாங்க. அப்ப ரொம்ப ரூடா நடந்துக்கிட்டாங்க. நானும் கலைஞன் தான். நான் மேக்கப் போடறது அலர்ஜியா இருந்தா, நீங்க ஏன் நடிக்கறீங்கன்னு கேட்டேன். கைய நீட்டிப் பேசறது பெண்ணுக்கு நல்லதில்லைன்னும் சொன்னேன். இதுதான் நடந்தது. பிறகு படத்துக்கு பாதிப்பு வரக்கூடாதுன்னு மன்னிப்புக் கேட்டேன். இதை பெரிய பிரச்னையா ஆக்கிட்டாங்க’ என்றார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்