Published : 23,Mar 2017 02:07 AM
மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு செல்வதைப் போல, இந்த ஆண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிந்து அவர் வீடு திரும்புவார் எனவும் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.