Published : 11,Jul 2018 07:47 AM

அம்மா உணவகம் போல் ஆந்திராவில் அண்ணா உணவகம்

AP-CM-to-inaugurate-anna-canteen

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இருந்த போது அம்மா உணவகம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி இட்லி ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்றும், மதிய உணவு 5 ரூபாய் என்ற வீதத்திலும் விற்கப்பட்டது. தினசரி கூலி வேலை செய்பவர்கள், குறைந்த சம்பளம் வாங்குவோர், பள்ளி மாணவர்கள் என பலருக்கும் உணவளிக்கும் இடமாக மாறியது. டெல்லியிலும் கூட பொங்கல் சமயத்தில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது

இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகள், சில வெளிநாட்டு அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு செயல்படுத்தப்படும் விதம் குறித்து தெரிந்து சென்றனர். இதனையடுத்து கர்நாடகாவில் இந்திரா கேண்டீன் திறக்கபட்டது ; ராஜஸ்தானில் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது ; இன்னும் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்ணா கேண்டீன் என்ற பெயரில் இதனை திறந்துள்ளார். அதன்படி மதிய உணவு 5 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. 

கடந்த 2014-ம் ஆண்டில் தேர்தல் வாக்குறுதியாக மாநிலம் முழுவதும் அண்ணா கேண்டீன் உருவாக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதன்படி முதல்கட்டமாக 160 இடங்களில் அண்ணா கேண்டின் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட உள்ளது. மதிய உணவு 15 ரூபாய்க்கும் இரவு உணவு 5 ரூபாய்க்கும் கொடுக்கப்படும். விரைவில் இந்த திட்டம் மாநிலம் முழுக்க விரிவுபடுத்தப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்