Published : 22,Mar 2017 05:35 PM

இரட்டை இலை சின்னம் முடக்கம்

EC-s-Decision-on-ADMK-s-Two-Leaves-symbol

இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம், தங்களுக்கே சொந்தம் என்று சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பு தேர்தல் ஆணையத்தில் வாதங்களை முன்வைத்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர்களுடன் 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதில் சர்ச்சை நீடிப்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுகவின் கட்சி பெயரையோ, சின்னத்தையோ சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்புமே பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தற்போது 2ஆவது முறையாக முடக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்