ஜப்பான் நாட்டில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை வீடு வீடாக மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் அந்தப் பகுதி கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. குராஷிகி பகுதியில் வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வெளியேற முடியாமல் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் சிலர் தஞ்சமடைந்துள்ளனர். பலரது வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலைகளும் மோசமாக பாதிப்படைந்துள்ளன.
தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 141 ஆன உயர்ந்துள்ளது. ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர்.
தாழ்வான பகுதியில் வசித்து வரும் 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். நில சரிவு மற்றும் வெள்ளத்தால் சிக்கியவர்களை மீட்க, மீட்பு படையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள் ளனர்.
‘ஒவ்வொரு வீடாக சென்று தேடுதல் நடத்தி வருகிறோம். யாரும் உள்ளே மாட்டியிருக்கிறார்களா என்று தேடி வருகிறோம். எங்களால் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக உதவிகளை செய்து வருகிறோம்’ என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்