[X] Close

உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு

World-Largest-Mobile-Factory-open-in-Noida

உலகிலேயே மிகப் பெரிய செல்போன் தொழிற்சாலை நொய்டாவில் திறக்கப்பட்டுள்ளது. 

நொய்டாவில் உலகிலேயே பெரிய செல்போன் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரிய அதிபர் மூன்-ஜே-இன் ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, செல்போன் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறினார். இந்தியாவில் 40 கோடி ஸ்மார்ட் போன்கள் இருப்பதாகவும், 32 கோடி மக்கள் பிராட்பேண்ட் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். 


Advertisement

இந்திய பிரதமரும், தென் கொரிய அதிபரும் திறந்து வைத்துள்ள சாம்சங் நிறுவன செல்போன் தயாரிப்பு ஆலை நொய்டாவில் 35 ஏக்கரில் அமைந்துள்ளது. செல்போன் ஆலை திறப்பு விழாவுக்கான இருவரும் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, நொய்டா வந்தடைந்தனர்.


Advertisement

Advertisement
[X] Close