எண்ணூர் கடலில் நண்பர்களுடன் குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் ருக்கு. திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது மகன் அப்பு. திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். விடுமுறை தினம் என்பதால் இன்று தமது நண்பர்களுடன் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடல் பகுதியில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கடல் அலை அப்புவை இழுத்து சென்றது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்புவை தேடிவந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பின் அவரது சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட எண்ணூர் காவல்துறையினர், உடற்கூறு ஆய்விற்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!