3வது டி20 : கோலியை போன்று சாதிப்பாரா ரோகித்?

3வது டி20 : கோலியை போன்று சாதிப்பாரா ரோகித்?
3வது டி20 : கோலியை போன்று சாதிப்பாரா ரோகித்?

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை என்பதால் இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடவுள்ளனர். 

இன்றைய போட்டி பிரிஷ்டாலில் உள்ள கவுண்டி மைதானத்தில் மாலை 6.30 மணியளவில் தொடங்குகிறது. இந்திய வீரர்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கே), எம்எஸ் தோனி, ரெய்னா, ஹர்திக் பாண்டியா, புவனேஸ் குமார், உமேஷ் யாதவ், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய போட்டியில் சில சாதனைகளுக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ரோகித் ஷர்மா 14 ரன்கள் அடித்தால், இந்திய அணியில் விராட் கோலிக்குப் பிறகு 2000 ரன்களை டி20-யில் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை தொடுவார். இதேபோன்று ரோகித் மற்றும் தவான் கூட்டணி 38 ரன்கள் அடித்தால், வார்னர் - வாட்சனின் 1154 ரன்கள் என்ற டி20 கூட்டணி ரன் குவிப்பை முறியடிப்பார்கள். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com