[X] Close

தயாராகிறது மிதாலி ராஜின் வாழ்க்கை படம்

Mithali-Raj-on-her-biopic--Priyanka-Chopra-will-be-a-great-choice-to-play-me

தனது வாழ்க்கை படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். மகளிர் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவருடைய வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக்கப்பட உள்ளதாக சமீப நாட்களாக பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மிதாலி ராஜ், தனது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதை உறுதி செய்தார்.


Advertisement

அதற்கான ஸ்கிரிப்ட் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், தனது வாழ்க்கை படத்தில் தனது வேடத்தை பிரியங்கா சோப்ரா ஏற்று நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். தம்முடைய தனித்தன்மை குணங்கள் பிரியங்கா சோப்ராவுடன் ஒத்துப்போவதாகவும் மிதாலி ராஜ் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close