கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்றதும் இந்தியர்களின் நினைவுக்கு வரும் பெயர் தோனி. கேப்டன் கூல், சிக்சர் மன்னன், ஹெலிகாப்டர் ஷாட் கில்லி என பல பெயர்கள் அவருக்கு உண்டு. புகழின் உச்சம் சென்றதும், அதிகமாக விமர்சிக்கப்பட்டதும் தோனி எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லும். இப்படி இருக்க, தோனியை குறித்து சக மற்றும் மற்ற நாட்டு வீரர்கள் சொன்னது என்ன தெரியுமா ?
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர். அவர் ஒருமுறை பேசும் போது தோனி பற்றி கேட்கிறார்கள். அதற்கு “ நான் விளையாடியதிலேயே மிகச் சிறந்த ஒரு கேப்டனின் தலமையில் விளையாடி இருக்கிறேன் என்றால் அது தோனி” என்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ஒருமுறை கேப்டன்களின் இரண்டு வகை உண்டு , முதல் வகை தோனி, இரண்டாம் வகை மற்ற அனைவரும் என்றார். கில்லி என்றதும் ஞாபகத்துக்கு வரும் ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில் “ மக்கள் எனக்கு தரும் பரிசு என்பது எனக்காக யாரோ ஒருவர் கிரிக்கெட்டை பார்க்கிறேன் என சொல்வது ; ஆனால் நான் விளையாடுவது எதற்காக என்றால், தோனியின் விளையாட்டை பார்ப்பதற்காக “ என்றார். சோயிப் மாலிக் கூறும் போது “ இந்தியர்கள் பலர் தோனியை வெறுக்கலாம், ஆனால் பாகிஸ்தானோ தோனி போன்ற கேப்டன் கிடைக்க மாட்டாரா என ஏங்குகிறது” என்றார்.
ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் வாகனிடம் தோனி குறித்து கூறுங்கள் என்ற போது “உலக கிரிக்கெட்டின் கூலான கேப்டன் தோனி , எப்பொழுது ஒரு தலைவன் உணர்ச்சிவயப்படாமல் , அமைதியாக ஒரு விஷயத்தை கையாளும் நிலை வருகிறதோ , அப்போது தோனி போன்று யாரும் செயல்பட முடியாது என்றார். “ நான் ஒரு இந்தியன், தோனியே எனது கேப்டன்” என்று பெருமையாக சொன்னார் சவுரவ் கங்குலி. கேரி கிறிஸ்டனிடம் தோனி குறித்து கேட்ட போது “தோனி மட்டும் என்னோடு வரத் தயாராக இருந்தால், நன போருக்கு கூட செல்வேன்” என்றார். ஸ்டீவ் வாக் எல்லோருக்கு ஒரு படி மேல் சென்று “ நான் மட்டும் ஒரு அணியை தேர்வு செய்யும் இடத்தில் சச்சினை ஓபனராகபும், தோனியை கேப்டனாகவும் தேர்வு செய்வேன்” என்றார். இதற்கிடையில் மைக் ஹஸ்ஸி தோனியோடு ஐ.பி.எல் விளையாடினார். அவரிடம் கேட்ட போது “ தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவது நான் செய்த பாக்கியம் “ என்றார். இப்படி பலரையும் கவர்ந்த தோனி சீனியர்களையும் கவர்ந்த ஒருவர்
சுனில் கவாஸ்கரிடம் தோனி குறித்து கேட்ட போது “ நான் இறப்பது உறுதி செய்யப்பட்டால், 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சிக்ஸ் அடித்ததை பார்த்து விட்டு இறக்க விரும்புகிறேன்” என்றார். இந்திய அணி மேலாளர் ரவி சாஸ்திரி கூறும் போது “ கிரிக்கெட்டில் பலரையும் நீங்கள் நினைவு கூற விரும்பினால், அந்த பட்டியல் தோனி இல்லாமல் நிறைவு பெறாது” என்றார். இப்படி பலரும் தோனி குறித்து பல்வேறு விஷயங்களை கூறியுள்ளனர். தோனி - ஆச்சரியத்தின் பிறப்பிடம்.
Loading More post
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?