[X] Close

தமிழக மாணவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி

Measures-to-Protect-TN-students--CM-palanisamy

உயர்கல்வி கற்க பிற மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உயர் கல்விக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாணவர் முத்துகிருஷ்ணன் மறைவிற்கு தமிழக அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். முத்துகிருஷ்ணன் தற்கொலை வழக்கு குறித்து டெல்லி வசந்தவிஹார் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் உயர்கல்வி கற்க பிற மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close