[X] Close

“நெய்மர்தான் எங்களுக்கு தல” - தெறிக்கவிடும் கேரள ரசிகர்கள்

FIFA-World-Cup--Fans-in-Kerala-go-crazy-over-Brazil-and-Neymar

உலகம் முழுவதும் கால்பந்தாட்ட ஜுரம் உச்சத்தில் உள்ளது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலியிறுதி போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கி உள்ளனர். 


Advertisement

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டும்தான் அதிக வரவேற்பு உள்ளது எனப் பெரும்பாலானோர் நினைத்திருந்தார்கள். ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டிற்கு சற்று மவுசு அதிகம்தான். அந்த வரிசையில் கால்பந்திற்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. கேரளா, மேற்வங்கத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் வடசென்னையில் கால்பந்தாட்டத்திற்கு என்று ஒரு பட்டாளமே உள்ளது.

                            


Advertisement

குறிப்பாக கேரளாவை பொறுத்தவரை ‘கால்பந்தாட்டம் எங்கள் ரத்தத்தில் இருக்கிறது’ என்று சொல்லும் அளவிற்கு தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் இந்த மூன்று பேரை பெரும்பாலானோருக்கு கேரளாவில் தெரிந்திருக்கும். உலகக் கோப்பை தொடங்கியது முதல் சிறிய சிறிய கிராமங்களில் கூட தங்கள் ரசிகர்களுக்கு பேனர்கள், கட் அவுட்கள் வைத்திருந்தார்கள். சில இடங்களில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிலையே வைத்திருக்கிறார்கள். 

                     

இந்த முறையில் கேரளாவில் திரும்பும் திசையெங்கும் நெய்மர் கட் அவுட்களை பார்க்க முடியும். அதில், நெய்மரின் படத்தை விதவிதமாக கெத்தாக சித்தரித்து கட் அவுட்கள் வைத்திருக்கிறார்கள்.


Advertisement

                      

பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் பல்டி அடித்ததை பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். ஆனால், கேரளாவில் உள்ள நெய்மர் ரசிகர்களும் பதில் மீம்ஸ்களை தட்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நெய்மருக்கு மட்டுமல்ல பிரேசில் அணிக்கே கேரளாவில் ஏராளமான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். 

                 

மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் அணிகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், தற்போது கேரள ரசிகர்களுக்கு உள்ள மிகப்பெரிய நம்பிக்கை நெய்மர்தான். 

                  


Advertisement

Advertisement
[X] Close