Published : 05,Jul 2018 07:39 AM

காவிரியின் குறுக்கே அணை - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

he-controversial-Mekedatu-project-will-begin-if-state-get-permission

பல ஆண்டு சட்டப் போராட்டத்துக்கு பிறகு இப்போதுதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கூட்டம் மட்டுமே நடந்துள்ள நிலையில் மீண்டும் காவிரியில் அணை என பேசியிருக்கிறார் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி. கார்நாடக மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து அதன் மீது பேசி வருகிறார் குமாரசமி

பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக உச்சநீதிமன்றம் தமிழகத்தின் ஒதுக்கீட்டில் 10 டி.எம்.சி. நீரை குறைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் கர்நாடக பட்ஜெட் உரையின் போது பேசிய குமாரசாமி பெங்களூருவின் தண்ணீர் தேவைக்காக காவிரியில் மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட வேண்டியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கும் என தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்