சுற்றிபார்க்க வந்தது குத்தமா..? மாணவனை தாக்கி கொள்ளை !

சுற்றிபார்க்க வந்தது குத்தமா..? மாணவனை தாக்கி கொள்ளை !
சுற்றிபார்க்க வந்தது குத்தமா..? மாணவனை தாக்கி கொள்ளை !

சென்னை சுற்றிபார்க்க வந்த டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவனை தாக்கி கொள்ளை அடித்துள்ள சம்பவம் அடையாறு  பகுதியில் பரபரப்பை உண்டாகியுள்ளது. 

டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவன் நிதிஷ்(20). இவர் சென்னை சுற்றிபார்க்க நேற்று வந்துள்ளார். நேற்றிரவு அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ஆட்டோவில் ஏறி செல்லும் போது அடையாளம் தெரியாத  5 நபர்கள் ஆட்டோவை மறித்து  ஆட்டோக்குள் இருந்து டெல்லி மாணவர் நிதிஷ்ஷை சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அவரிடம் இருந்து தங்க மோதிரம், ரூபாய் 25 ஆயிரம் பணம், லேப்டாப் , மற்றும் ஐபோன் ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடி விட்டனர். 

நிதிஷ் அதே இடத்தில் மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனையெடுத்து ஆட்டோ ஓட்டுனரும் தப்பி ஓட அந்தவழியாக வந்த பொதுமக்கள் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிதீஷை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். திருடிவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com