[X] Close

இரட்டை இலை சின்னம்: என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Election-Commission-today-decide-about-two-leaves-symbol

அதிமுக-வின் இரட்டை சிலை சின்னம் சசிகலா தரப்பிற்கு ஒதுக்கப்படுமா.? அல்லது ஓபிஎஸ் தரப்பிற்கு கொடுக்கப்படுமா..? இரண்டும் இல்லையென்றால் முடக்கப்படுமா என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவைத்தான் அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.


Advertisement

அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற இரண்டு அணிகளும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் ஆணையம் இரு தரப்பு வாதங்களையும் அறிவதற்காக இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதன்படி இரு தரப்பினரும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் தனது முடிவை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு முடிவை ஒத்திவைத்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.


Advertisement

தீர்ப்பு எப்படி இருக்கலாம்?

வாய்ப்பு ஒன்று: சசிகலா தரப்பிற்கு சின்னத்தை வழங்கலாம்

இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பிற்கு தேர்தல் ஆணையம் வழங்கினால் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகத்தான் அர்த்தம். அதிமுக பொதுச் செயலாரளாக தேர்வான பின், பன்னீர்செல்வத்தை அதிமுக-வில் இருந்து நீக்கியது உள்பட அவரின் அனைத்து நடவடிக்கைகளும் செல்லுபடியாகும். ஆர்.நே.நகர் அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் எந்தவித பிரச்னையுமின்றி இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடலாம்.


Advertisement

வாய்ப்பு இரண்டு: சின்னத்தை முடக்கலாம்

அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கவும் செய்யலாம். அப்படி முடக்கினால் அந்தத் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிரானதாக அமையும். சசிகலா பொதுச் செயலாளரானது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம்.

சசிகலா பொதுச் செயலாளராக எடுத்த முடிவுகள் செல்லாமல் போகும். டிடிவி தினகரன் அதிமுக சார்பில் போட்டியிட முடியாது. அவருக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து தனிச்சின்னம்தான் கொடுக்கப்படும். இப்படி ஒரு தீர்ப்பு வந்தால் அது பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவாக அமையும். ஆனாலும் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.


Advertisement

Advertisement
[X] Close