[X] Close

வானம்பாடியாக மாறிய கேரள தொழிலாளி.. திறமையை கண்டு வியந்த கமல்ஹாசன்..!

Kerala-Mans-Melodious-Singing-Goes-Viral

வானம்பாடி பறவை போல திகழ்ந்த கேரள இளைஞரை நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தொழிலாளி ஒருவர் தோட்டத்தில் இருந்தபடி பாடும் பாடல் காட்சிகள் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எந்தவித இசையும் இல்லாமல், பயிற்சியும் பெறாமல் முழுமையாக பாடலுக்குள் மூழ்கியபடி அந்த தொழிலாளி பாடும் பாடல் பலரையும் வெகுவாக கவர்ந்தது. விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற “ உன்னை காணாது நான் இங்கு நான் இல்லையே” உள்பட ஒரு சில பாடல்களை அந்த தொழிலாளி பாடியிருந்தார். இதனை இணையவாசிகள் வெகுவாக புகழ்ந்து தள்ளினர். இந்த வீடியோ ஷங்கர் மகாதேவன் கைகளுக்கும் சென்றிருக்கிறது. தொழிலாளியின் திறமையை கண்டு வியந்த ஷங்கர் மகாதேவன், அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில், “ யார் இந்த மனிதர், அவரை எப்படி கண்டுபிடிப்பது.. அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். உதவி தேவை” என தெரிவித்திருந்தார்.


Advertisement

இதனால் அந்த தொழிலாளி பலரின் கண்களுக்கும் தெரியவந்தார். முடிவில் அவர் கேரளாவை சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளி ராகேஷ் உன்னி என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராகேஷ் உன்னியை பலரும் கவனிக்க ஆரம்பித்தனர். தோட்டத்தில் ஒரு வானம்பாடி பறவை போல அவர் பாடி சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

ஒரே நாளில் சமூக வலைதளங்களில் தனது திறமையால் பலரின் கண்களுக்கும் பிடித்த நபராக மாறினார் ராகேஷ் உன்னி. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ராகேஷ் உன்னியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் தான் ராகேஷ் உன்னியை கமல்ஹாசன் சந்தித்தார். அந்த நேரத்தில் ராகேஷ் உன்னி கமல்ஹாசன் முன்னிலையில் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி காட்டி அசத்தினார். அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் கைதட்டி ராகேஷ் உன்னிக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசனும் ராகேஷ் உன்னிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவரின் திறமையை வெகுவாக பாராட்டினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close