[X] Close

“ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை” - மஞ்சுமா மோகன் 

Manjima-Mohan-wants-to-play-Jayalalithaa-in-her-biopic

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை என மஞ்சுமா மோகன் கூறியிருக்கிறார். 

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தனி ரசிகர்களை ஈர்த்தவர் மஞ்சுமா மோகன். சிம்புவுடன் அவர் நடித்த படம் பெரிய அளவுக்கு பேசப்பட்டாலும் மஞ்சுவுக்கு, அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரவில்லை. இதனிடையே அவர் தனக்கு மூன்று வாய்ப்புக்கள் வந்ததாகவும் அதனை சிலர் தடுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். ஆகவே அந்தப்பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அவரிடம் யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவர் வேடத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன். அவர் ஒரு அயர்ன் லேடி. தைரியசாலி. படத்தில் நடிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையை அப்படியே அனுபவிக்கலாம் இல்லையா?” என்று கூறியிருக்கிறார் மஞ்சுமா.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close