தனிமையில் வாடும் முதியவர்கள், தங்களின் உதவிக்காக சிறுவர்களை பணியமர்த்தும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
பொருளாதாரத்திற்கான போராட்டத்தின் காரணமாக வெளியூர் செல்லும் பிள்ளைகள் பெற்றோரை கவனிக்க முடியாததால், சிறுவர்களையும், இளைஞர்களையும் இதற்காக பணித்து வருகின்றனர். இதற்காக டெல்லி, புனே உள்ளிட்ட இடங்களில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிறுவர்களும், இளைஞர்களும் தனிமையில் வாடும் முதியவர்களுக்கு ஆறுதலாக இருப்பதும், மருந்து, மளிகை பொருட்களை வாங்கித் தருவது என அவர்களுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளையும் செய்கின்றனர். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் முதியவர்களுக்கு உதவும் இளைஞர்களுக்கும் சிறிது பணம் சம்பாதிக்க முடிவதாக தெரிவிக்கின்றனர். 60 வயதைத் தாண்டியுள்ள முதியவர்கள் இந்தியாவில் தற்போது 10 கோடிக்கும் மேலானோர் இருக்கின்றனர். 2021-ஆம் ஆண்டிற்குள் இது 14 கோடியை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஆசியாவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவில், இந்த நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!