Published : 22,Mar 2017 02:18 AM
ஏர் இந்தியா விமானத்தில் இலவச வை-பை

ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமானங்களில் இலவச வை-பை வசதியை தருவதற்கு திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் ஏ-320 ரக விமானங்களில் இந்த வசதி தரப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக விமானங்களில் வை-பை வசதியை இலவசமாக தரும் நிறுவனம் என்ற பெருமையை ஏர் இந்தியா பெறுகிறது. எனினும், எவ்வளவு வேகத்தில் வை-பை இயங்கும் என்பதை ஏர் இந்தியா தெரிவிக்கவில்லை. ஜூன் அல்லது ஜூலை மாதம் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இனி விமானத்தில் பறக்கும் போதும், இ-மெயில், வாட்ஸ்ஆப் வசதிகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.