[X] Close

ஆன்லைனில் கரண்ட் பில் கட்டினால் சலுகை?

TNEB-plans-to-increase-online-payments

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு ஒரு சதவிகிதம் தள்ளுபடி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

தற்போது ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோர் எண்ணிக்கை 20 சதவிகிதமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலும், மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் மின்வாரியம் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் மின் கட்டணத்தில் இருந்து ஒரு சதவிகிதம் தள்ளுபடி வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Advertisement

இதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததும் திட்டம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இந்த புதிய திட்டம் மூலம் மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்காக நுகர்வோர்‌ நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலும், ஊழியர்களின் பணிச்சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Advertisement

Advertisement
[X] Close