
மக்களவையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 10 கேள்விகள் கேட்கலாம் என்ற விதி இதுவரை இருந்து வந்தது. தற்போது அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் ஒரு நாள் ஒன்றுக்கு இனி 5 கேள்விகளை மட்டுமே உறுப்பினர்கள் கேட்ட வேண்டும்.
5 கேள்விகளுக்கு மேல் கேட்க வேண்டுமெனில் சபாநாயகரிடம் எம்.பி.க்கள் நோட்டீஸ் தர வேண்டும். அப்படியும் 10 கேள்விகளுக்கு மேல் நோட்டீஸ் அளிக்க முடியாது