[X] Close

சச்சின் நிதியிலிருந்து பெரம்பலூரில் போடப்படும் தார் சாலை !

Village-to-get-road-under-Sachin-Tendulkar---s-MP-fund

சச்சின் டெண்டுல்கர் எம்.பியாக இருந்த போது தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்த நிதி மூலம் பெரம்பலூரில் உள்ள கிராமத்தில்  சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் தான் எம்.பியாக இருந்த காலத்தில் பல்வேறு பணிகளுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கி இருந்தார். அதன்படி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில் சாலைப் பணிகள் மேற்கொள்ள சச்சினின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ21.70லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி மூலம் தற்போது சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.


Advertisement

இந்த சாலை பணிகளை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


Advertisement

Advertisement
[X] Close