காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர்

காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர்
காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர்

வடசேரி அருகில் விபத்தில் காயமடைந்து சாலையில் கிடந்தவருக்கு காரில் இருந்து இறங்கி முதலமைச்சர் பழனிசாமி உதவி செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 3.30 மணியளவில் கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை வரும் சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது வடசேரி பிரிவு அருகில், சாலை விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர் காயமடைந்து கிடந்தார். இந்த சம்பவத்தை பார்த்த முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தார்.

அத்துடன் தன்னுடன் பாதுகாப்பிற்காக வந்த ஆம்புலன்ஸில் காயமடைந்த நபரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அந்த நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கமாறும், அவருக்கு உரிய உதவிகள் செய்யுமாறும் ஆட்சியருக்கு உத்தரவிட்டார். பின்னர் தனது பயணத்தை தொடர்ந்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com