[X] Close

பிக்பாஸில் இன்று வெளியேறப்போவது யார் ? மமதி என பரவும் வதந்தி

who-will-first-elimination-in-bigboss-2

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து முதலில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும்.


Advertisement

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். கடந்த சில நாட்களாக நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்து வருவதால் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கமல் போட்டியாளர்களுடன் உரையாடுவார். அதன்படி கமல் நேற்று போட்டியாளர்களுக்கு குறும்படம் போட்டு காட்டியதோடு, பாலாஜி மற்றும் நித்யாவிடம் நீண்ட நேரம் பேசினார். மேலும் பேசிய அவர், ஒரு உறவு உண்டாகும் போது மரியாதை கொடுக்கிறோம். அதேபோன்று பிரியும் நேரம் ஏற்பட்டாலும் அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என கூறினார். தன் வாழ்வில் அதனை கடைபிடிப்பதாகவும் கமல் குறிப்பிட்டார்.


Advertisement

இதனிடையே இந்த வார எலிமிஷேசன் பட்டியலில் மும்தாஜ், மமதி, அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம் ஆகியோர் இருந்தனர். ஆனால் நேற்றைய நாள் முடிவில் பொன்னம்பலம் இந்த வாரம் வெளியேற்றப்படவில்லை என்பதை கமல் உறுதி செய்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து முதலில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும். ஏற்கெனவே மமதி வெளியேறப்போவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகின. மேலும், பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி புரளி பேசுவதாகவும், போலியாக இருப்பதாகவும் போட்டியாளர்கள் பலர் குற்றஞ்சாட்டி இருந்தனர். அதேபோல் மும்தாஜ் நட்சத்திர அந்தஸ்தில் வாழ ஆசைப்படுகிறார் என்ற புகாரும் இருக்கிறது. எனவே இன்று யார் வெளியேறப் போகிறார் என யூகிக்க முடியவில்லை. மேலும் இன்றைய நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் வெளியீட்டும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி ஹாஸனும் பங்கேற்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close